88,000 கணக்குகளை நீக்கி ட்விட்டர் காட்டிய அதிரடி!

  சாரா   | Last Modified : 24 Dec, 2019 07:52 pm
88-000-twitter-accounts-terminated

ட்விட்டரின் விதிகளுக்கு எதிராக இயங்கிய 88,000 கணக்குகளை நீக்கி வெறும் 6000 கணக்குகளை மட்டும் கணக்கு காட்டியுள்ளது அதன் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீப காலமாக ட்விட்டர் விதிகளைக் கடைபிடிக்காமல் எண்ணற்ற பேர் அவர்களது கருத்துக்களை பதிவேற்றி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், போலி கணக்குகளை களையவும், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் தனியாக ஒரு குழுவை ஏற்படுத்தி கண்காணித்து வந்தனர். அதன் படி அடிக்கடி அந்த குழுவினர், ட்விட்டர் கணக்குகளை ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறுபவர்களின் ட்விட்டர் கணக்கை முழுவதுமாக முடக்கப்படுவது வாடிக்கையானது.

அதன்படி இந்த முறை ஒரே நேரத்தில் அதிரடியாக 88,000 ட்விட்டர் கணக்குகளை முடக்கி அதிரடி காட்டியுள்ளது. ஆனால் 88,000 கணக்குகளை முடக்கி விட்டு வெறும் 6000 கணக்குகளுக்கு மட்டும் பட்டியல் வெளியிட்டுடுள்ளது. 
மேலுமொரு தகவலாக முடக்கப்பட்ட இந்த கணக்குகள் அனைத்தும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களால் பராமரிக்கப்படும் கணக்குகள் என ட்விட்டரில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close