ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழர்கள் கைது..

  முத்து   | Last Modified : 25 Dec, 2019 08:08 am
tamils-arrested-in-andhra-pradesh

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற, தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் தலக்கோணா வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, 10-க்கும் மேற்பட்டோர் செம்மரக் கட்டைகளுடன் வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய அவர்களை துரத்தியதில் 6 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களில் பாலாஜி, ஆர்.ஆண்டி, ராமன், பொன்னுசாமி, சி.ஆண்டி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், குமார் என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close