அப்பாவி இளைஞரை சுட்டுக் கொன்ற போலீசார்! சுட்டது யார் என அதிகாரிகளுக்குள் சண்டை!

  முத்து   | Last Modified : 25 Dec, 2019 11:39 am
we-shot-a-young-man-on-the-defensive-dgp

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 21 பேர்  உயிரிழந்தனர். இதில், கடந்த 20-ந்தேதி, பிஜ்னோரில் நாதார் பகுதியில் சுலைமான் (வயது 22)  என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். போலீஸ் துப்பாக்கி சூட்டில்தான் அவர் இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், ‘‘கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட பலியாகவில்லை, கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தான், தவறுதலாக பலர் உயிரிழந்தனர் என்று மறுப்பு தெரிவித்தார். 

இந்நிலையில், டி.ஜி.பி. கருத்துக்கு மாறாக பிஜ்னோர் மாவட்ட போலீசார், தங்களது துப்பாக்கி சூட்டில் சுலைமான் பலியானதாக ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த 20-ந்தேதி வெள்ளிக்கிழமை, ஒரு வன்முறை கும்பல், போலீஸ் நிலையத்தை தாக்கியது. சப்-இன்ஸ்பெக்டர் ஆசி‌‌ஷ் தோமரின் துப்பாக்கியை பறித்தது. ஒரு போலீஸ்காரர், அதை திரும்பப் பெற முயன்ற போது, அவரை சுட்டது. தற்காப்புக்காக போலீஸ்காரர் திருப்பிச் சுட்ட போது, கலவரக்காரர்களில் ஒருவரான சுலைமான் குண்டு பாய்ந்து பலியானார்.

அதுபோல், கலவர கும்பல் சுட்டதில் அனிஸ் என்பவர் பலியானார். இவ்வாறு அவர் கூறினார். ஆனால், சுலைமான், சிவில் சர்வீசஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும், அவருக்கும் கலவரத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close