கோடி ரூபா காரை அடித்து நொறுக்கிய கோபக்கார இளைஞர்!

  முத்து   | Last Modified : 25 Dec, 2019 11:51 am
disgruntled-russian-man-drops-his-mercedes-from-a-helicopter

ரஷ்யாவை சேர்ந்த இகோர் மொரோஸ் என்ற இளைஞர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சமீபத்தில் ஆசையாக மெர்சிடிஸ் எஸ்.யூ.வி என்னும் விலையுயர்ந்த காரை அந்த இளைஞர் வாங்கினார். ஆனால் ஆசையாக காரை வாங்கி அதனை ஒட்டி பார்த்தபோது அதில் அடுத்தடுத்து தொடர்ந்து கோளாறு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த இகோர் காரை உடைத்து விட முடிவு செய்துள்ளார். பின்னர், ஹெலிகாப்டர் ஒன்றை தாயார் நிலையில் வைத்து அதில் காரை கட்டி 1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுமாறு ஏற்பாடு செய்தார்.

இதன் காரணமாக கார் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதனை கிழே இருந்து கூல்ட்ரீங்ஸ் குடித்தப் படி கூலாக இருந்து அந்த இளைஞர் பார்த்து ரசித்தார். ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு காரை அது கொடுத்த தொல்லையினால் உடைத்து அதனை இணையத்திலும் அவர் வெளியிட்டிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close