குழந்தையைக் கடித்துக் குதறிய வெறிநாய்! துணிச்சலாக காப்பாற்றிய இளைஞர்

  முத்து   | Last Modified : 26 Dec, 2019 02:17 pm
the-young-man-who-rescued-the-boy-from-the-dog

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 4 வயதுக் குழந்தையுடன் தாய் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்ற பிட்புல் வகையைச் சேர்ந்த நாய் திடீரென சிறுவனைக் கடித்துக் குதறியது.

இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்ற போராடினார். 

ஒரு கட்டத்தில் குழந்தையை அங்கிருந்த காரின் மேற்கூரையில் குழந்தையை வைத்து விட, கோபமடைந்த அந்த நாய், குறிப்பிட்ட இளைஞரையும் கடித்துக் குதறியது.

ஒருவழியாக நாயிடமிருந்து தப்பிய அந்த நபர் தானும் காரின் மேற்கூரையில் ஏறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நாயின் வெறியாட்டக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close