இரவு நேரங்களில் மொபைல் யூஸ் பண்ணா? இந்த விபரீதங்களை சந்திக்க நேரிடும்

  அனிதா   | Last Modified : 27 Dec, 2019 10:05 am
do-you-use-mobile-phones-at-night

இரவு நேரங்களில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான் நைட் மோட் என்னும் வசதி மொபைல் போனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த நைட் மோடை உபயோகப்படுத்தினாலும் கண்ணிற்கு ஆபத்து என ஆராய்ச்சியாளர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர். இரவு நேரங்களில் லைட்டை ஆஃப் பண்ணியதற்கு பிறகு மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது, காரணம் மொபைல் போனிலிருந்து வெளிவரும் நீல நிறக்கதிர்கள் கண் பார்வையை இழக்கச் செய்யுமளவுக்கு ஆபத்தானது என்று சொல்லித் தான் நைட் மோட் எனும் ஆப்சனை ஸ்மார்ட் போன்களில் அறிமுகம் செய்தார்கள்

ஆனால், நைட் மோடில் தற்போது வெளியிடப்படும் மஞ்சள் நிறக்கதிர்கள் மட்டும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என்ற கேள்வியை ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஆய்வினை எலிகளுக்கு சோதனையிட்டு வருகிறார்கள். எனவே முடிந்த அளவுக்கு இரவு நேரங்களில் மொபைல் போனை பயன்படுத்தாமல் தவிர்த்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எளிதாக கடந்து விடலாம்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close