அதிமுக சிஏஏவை ஆதரித்தது ஏன்? உண்மையை போட்டுடைத்த அன்வர் ராஜா

  அனிதா   | Last Modified : 27 Dec, 2019 10:16 am
why-did-the-aiadmk-support-the-caa-anwar-raja

குடியுரிமை சட்ட மசோதாவை கூட்டணித் தர்மத்துக்காகத் தான் அதிமுக ஆதரித்தது என அதிமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு அதிமுக, பாமக எம்.பிக்கள் ஆதரித்து  வாக்களித்தனர். ஒருவேளை இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிக்கவில்லை என்றால் இந்த மசோதா நிறைவேறி இருக்காது. 

இதுகுறித்து விளக்கமளித்த பாமக இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் எம்.பி,  கூட்டணி தர்மத்துக்காக சிஏஏ வை ஆதரித்ததாக தெரிவித்தார். அதே விளக்கத்தைத் தான் அதிமுக சார்பிலும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களின் சந்திப்பின் போது அன்வர் ராஜா பேசியதாவது, கூட்டணித்தர்மத்திற்காக மட்டுமே சிஏஏவை அதிமுக ஆதரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்களை திமுக பிரிக்கப் பார்க்கிறது. அசாமில் இருக்கும் இஸ்லாமியர்கள் வெளியேற்றம் குறித்து தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அதே சமயத்தில் குடியுரிமைப் பதிவேட்டை பாஜகவைச் சேர்ந்தவர்களே எதிர்த்து வருகின்றனர். எனவே தமிழகத்திலும் இதை நடைமுறைப் படுத்த விட மாட்டோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close