பிளாஷ் பேக் 2019! டாப் 10 திரைப்படங்கள்! தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்கள்!

  அனிதா   | Last Modified : 27 Dec, 2019 03:08 pm
top-10-directors

சினிமாவில் எவ்வளவு தான் நடிகர்களுக்கு முக்கியத்துவமும் பெருமையும் இருந்தாலும், படம் ஓடவில்லை என்றாலும், சூப்பர் ஹிட் என்றாலும், அதற்கான முழுப்பொறுப்பும் பாராட்டுக்களும் இயக்குநர்களையே சேரும். ஆனாலும், படம் ஹிட் ஆனால் படத்தின் நடிகர்களை பராட்டும் ரசிகர்கள், படம் ஓடவில்லை என்றால் இயக்குநரையே திட்டி தீர்க்கின்றனர். இருப்பினும் படம் முழுமையாக உருவாக இயக்குநரின் உழைப்பு மிக இன்றியமையாத ஒன்றாகும். 

அந்த வகையில், 2019ம் ஆண்டில் சிறந்த படங்களை கொடுத்த டாப் 10 இயக்குநர்கள்  இவர்கள் தான்..

10. நெல்சன் வெங்கடேசன்

ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து, எஸ்.ஜே. சூர்யாவை வைத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களிக்கும் வகையில் மான்ஸ்டர் படத்தை உருவாக்கியவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். எலியுடன், எஸ்.ஜே.சூர்யா போட்டி போடும் காட்சிகளும், பெரும்பாலான வீடுகளில் எலிகள் கொடுக்கும் தொல்லைகளையும் திரை முன் கொண்டு வந்தது, தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

9. ஜெகதீசன் சுப்பு

இதுவரை யாரும் களம் இறங்காத புதிய முயற்சியில் தமிழ் திரையுலகையே மிரள வைத்தவர் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு. ஒட்டகத்திற்கும் மனிதருக்கும் இடையேயான அன்பை திரையின் முன்பு கொண்டு வந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ள காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. பாக்ஸ் ஆஃபிஸில் பக்ரீத் வசூலைக் குவிக்க வில்லை என்றாலும் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் இதுவும் ஒன்றுதான்.

8. ரத்னகுமார்

மேயாத மான் படத்தை இயக்கி முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்த இயக்குநர் ரத்னகுமார். இந்த ஆண்டு அமலா பாலின் ஆடை படத்தின் மூலம் பிரான்க் ஷோக்கள் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

7. ராம்

மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேரன்பு படம் ரிலீசுக்கு முன்பே உலகளவில் பல விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை குவித்து, பின்னர் தமிழ் திரையில் வெளியானது. தியேட்டர்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், படத்தை இயக்கிய இயக்குநர் ராமுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

6. தியாகராஜா குமாரராஜா

பல நடிகர்களை கொண்டு புது விதமான கதை களத்துடன் தற்போதைய காலக்கட்டங்களில் உள்ள நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தை கொடுத்தவர் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. இப்படம் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்றாலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

5. மகிழ் திருமேனி 

அருண் விஜய்க்கு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தடம். இப்படத்தில் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை வைத்து தப்பித்துக்கொள்வதை அப்பட்டமாக படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.

4. பிரதீப் ரங்கநாதன்

தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி இயக்குநராக மாறியுள்ளார்  பிரதீப் ரங்கநாதன். காமெடியில் சென்டிமென்ட்டை டச் செய்து இரு விஷயங்களையும் மாறி மாறி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, விழிப்புணர்வு கொடுத்துள்ளார் கோமாளி படத்தின் வாயிலாக.. இப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டையும் கொடுத்துள்ளார். 

3. பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் அவரே தயாரித்து நடித்த ஒத்த செருப்பு படமும் இந்த ஆண்டு சிறந்த இயக்கத்தை பெற்றிருந்தது. அதிக பொருட்செலவு செய்யாமல், ஒரே அறையில், ஒரே நடிகர் நடிக்கும் படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியில் தரமான படமாக இந்த படம் இருந்தது. 

2. லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த இயக்குநர், இந்த ஆண்டு கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படம் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் பாடல்கள், ஹீரோயின் இல்லை என்றாலும், கார்த்தியின் நடிப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் இயக்குநர். சண்டை காட்சிகள், என்டர்டெயின்மென்ட் என எந்த குறைவும் இல்லாமல் படத்தின் இறுதி வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்றும் குறையாமல் படத்தை வெற்றி படமாக இயக்கியுள்ளார் லோகேஷ்.

1.வெற்றிமாறன்

ஹாலிவுட் இயக்குநர்கள் போல தொடர்ந்து நல்ல நாவல்களை திரைப்படங்களாக மாற்றி வெற்றியை கொடுத்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே விருது தான் என்ற அளவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அசுரன்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close