ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 85 வயது மூதாட்டி! குவியும் பாராட்டுக்கள்!

  சாரா   | Last Modified : 27 Dec, 2019 03:02 pm
85-yrs-old-lady-voting

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைப்பெற்று வரும் நிலையில், கரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி பொன்னம்மாள், ஆம்புலன்ஸ் மூலம் வாக்குசாவடிக்கு வந்து தன் ஜனநாயக கடமையை ஆற்றினார். 

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்மாள், இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது ஓட்டு போட்டுவிட வேண்டும் என ஆசைப்பட்ட பொன்னம்மாவிற்கு அப்பகுதி இளைஞர்கள் உதவி செய்துள்ளனர்.

பொன்னம்மாவை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி வந்து, ஆத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்ய வைத்துள்ளனர். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடுமையையாற்றியுள்ள மூதாட்டியை தேர்தல் பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close