கோவிலுக்கு பதில் ஸ்கூலுக்கு செலவழிப்போம்! சாதித்து காட்டிய கிராம மக்கள்!!

  அனிதா   | Last Modified : 28 Dec, 2019 06:40 am
the-villagers-who-decided-to-spend-the-temple-festival-expenses-on-school

குழந்தைகளுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது என்ற விழிப்புணர்வு இன்று நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களிடம் மேலோங்கி உள்ளது. 

மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி என்ற கிராம மக்கள், அங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில், பண்டிகை உள்ளிட்ட மத வழிபாடுகளுக்கு தேவையில்லாமல் செலவு செய்வதற்கு பதிலாக அந்த பணத்தை போக்ரி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்க திட்டமிட்டுள்ளனர்.

போக்ரி கிராம பள்ளி வளாகம் தற்போது 20,000 சதுர அடி (சுமார் 0.45 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. பள்ளியையும் அதன் வசதிகளையும் மேம்படுத்துவதற்காக, மத நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளைக் குறைக்க கிராம மக்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவை எடுத்திருக்கிறார்கள். பகவத் சப்தா எனப்படும் திருவிழாவின் (ஒரு வார கால மத நிகழ்வு) போது தேவைப்படும் கூடாரங்கள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மத நிகழ்வுகளுக்கான செலவுகளை கிராம மக்கள் குறைத்துள்ளார்கள்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close