இந்து என்பதால பாகிஸ்தான்ல ஒதுக்கினாங்க! ஷோயப் அக்தர் ஓபன் டாக்!

  சாரா   | Last Modified : 28 Dec, 2019 06:39 am
discriminated-against-because-of-hindu-shoaib-akhtar

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கினார். இதனால் பாக். கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்தது. அதன் பின் பலமுறை வீரர்களிடமும், வாரியத்திடமும் கனேரியா முறையிட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கனேரியா இந்து என்பதால்தான் அவரை அனைவரும் ஒதுக்குவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பேட்டியில், கனேரியா பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதைப் பல வீரர்கள் விரும்பவில்லை என்றும், ஏனென்றால் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை யாருக்கும் பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், அவரின் பல்வேறு சாதனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பல நேரங்களில் அவரின் திறமையை சக வீரர்களே கிண்டல் செய்துள்ளனர் என பல விஷயங்களை போட்டுடைத்தார். 

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், மதவாதத்தை பற்றி பேசும் போது நான் பலமுறை சண்டையிட்டு இருப்பதாகவும், கனேரியா உணவு கொண்டுவந்தால்கூட அவர் எப்படி உணவு கொண்டுவரலாம் என்று அணியில் மற்ற வீரர்கள் கேட்பார்கள். ஆனால் அதே கனேரியாவால் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தார். 

பாகிஸ்தான் அணியில் விளையாடி ஏராளமான விக்கெட்டுகளையும், வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். அவர் முயற்சி இல்லாமல் நாங்கள் வென்றிருக்க முடியாது. ஆனால் பலரும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. இந்து வீரர் என்பதால் பாகுபாட்டுடன்தான் நடத்தப்பட்டார்" எனத் தெரிவித்தார்.

 

 

இதனிடையே, ஷோயப் அக்தர் பேட்டியை கேட்ட டேனிஷ் கனேரியா நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என்று அக்தர் சொன்னது அனைத்தும் உண்மை தான் என தெரிவித்துள்ளார். 

என்னுடைய வாழ்க்கை இப்போது நல்லவிதமாக இல்லை என்றும், என் வாழ்வில் ஏற்பட்ட குழப்பங்களைக் களையப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரராக இன்றும் நான் பெருமை கொள்வதாகவும், பல உண்மைகளைப் பேசிய ஷோயப்க்கும், எனக்கு அணிக்குள் பலமுறை ஆதரவு தெரிவித்த வீரர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன். அதோடு, ஊடகம், நேர்மையான கிரிக்கெட் நிர்வாகிகள், பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close