'குற்றப்பரம்பரை' பாரதிராஜா இயக்கத்தில் அடுத்த மாசம் வெளிவருது!

  அனிதா   | Last Modified : 28 Dec, 2019 02:05 pm
kutraparambarai-web-series

குற்றப்பரம்பரை கதையை வெப் சீரியஸாக உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா கடந்த பல ஆண்டுகளாக தெரிவித்து வந்தார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக படபூஜைகள் போடப்பட்டது. ஆனாலும் பூஜையோடே படப்பிடிப்பும் நின்றது. இதையடுத்து இயக்குநர் பாலா  ’குற்றப்பரம்பரை’ கதையை திரைப்படமாக இயக்க உள்ளதாக அறிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குற்றப்பரம்பரை கதையை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர்களிடையே இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதையை இருவருமே இயக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் ’குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க இருப்பதாக பாரதிராஜா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெப்சீரிஸ்ஸாக உருவாக இருப்பதாகவும் தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று அதனை ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸை பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க iருப்பதாகவும், இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close