ஆபாச படம் விவகாரத்தில் 2வது லிஸ்டும் ரெடி... கைது செய்ய தயாராகும் காவல்துறை.. 

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 10:44 am
2nd-list-of-porn-viewers-is-ready

குழந்தைகள் ஆபாச வதை வீடியோவை பார்த்த, அப்லோட் செய்த, ஷேர் செய்தவர்களின் இரண்டாவது பட்டியல் தயாராகிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கொடுத்த தகவல் அடிப்படையில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை அப்லோட் செய்தவர்கள், ஷேர் செய்தவர்கள் பட்டியலை தமிழ்நாடு காவல்துறை தயாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் அல்போன்ஸ் என்ற நபர் முதன் முதலில் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக மாணவிகளுக்கு ஐபேடில் ஆபாச படம் காட்டியதாக முதியவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 30 பேர் கொண்ட முதல் பட்டியலை காவல்துறை தயாரித்தது. இதனையடுத்து இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர். இப்படி குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி, பகிர்ந்தவர்களின் 3000த்துக்கும் மேற்பட்ட ஐ.பி அட்ரஸ் போலீசாரிடம் உள்ளது. இந்த ஐ.பி அட்ரசை வைத்து உண்மையான முகவரி, நபர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது பட்டியலில் 40 பேர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் சென்னை மட்டுமின்றி, கோவை, திருச்சி என பல மாவட்டங்களிலும் இதற்கென சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close