பூங்காக்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! சீரழியும் தலைமுறை!!

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 02:25 pm
chennai-park-in-lovers

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 1675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக நீர்யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீளவால் குரங்கு, மனித குரங்கு, புள்ளிமான், கரடி, செந்நாய், வரி குதிரை, ஒட்டக சிவிங்கி ஆகியவை ஏராளமாக உள்ளன.

ஆனால் இங்கு வரும் இளஞ்சோடிகள் இயற்கையையும், விலங்குகளையும் கண்டு ரசிப்பதில்லை என அங்கு வரும் சுற்றுலா பயணிகள் புகார்  தெரிவிக்கின்றனர். 

மாறாக காதல் ஜோடிகள் பூங்காவில் உள்ள மறைவான இடங்கள் மற்றும் செடி புதர்களில் உட்கார்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் சிலர் பூங்காவின் வெளிப்படையான இடத்திலேயே சில்மிஷத்தில் ஈடுபடும் செயல், பூங்காவுக்கு குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுபற்றி பூங்கா உயரதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தாலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பூங்காவில் அத்துமீறல்கள் அதிகரிக்கிறது என புகார் எழுந்துள்ளது. 

பல காதல் ஜோடிகள் காலை 10 மணிக்கு வந்து மாலை 6 மணிவரை பூங்காவிலேயே மறைவான பகுதிகளில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் கூறினால், விடுமுறை நாட்களில் மட்டும் தான் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விடுமுறை அல்லாத நாட்களில் இதுபோன்ற காதல் ஜோடிகள் வந்தால் மட்டுமே பூங்காவுக்கு வருமானம். அதனால், இதை கண்டு கொள்ள வேண்டாம் என அலட்சியமாக தெரிவிக்கின்றனர்' என்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close