தனிமையில் தவித்த மனைவி! கணவரே ஆட்களை அனுப்பிய கொடூரம்!

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 02:19 pm
the-husband-who-killed-his-wife

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வினுதா, நரேந்திரபாபு தம்பதியினர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்ததை தொடர்ந்து விவகாரத்திற்கு விண்ணப்பித்து இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

மகன் நிஷாந்தன் தந்தையின் பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வினுதாவின் தயார் தொடர்ந்து 4 முறை அவருக்கு செல்போனில் தொடர்பு கொள்ள அவர் போனை எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து நேரடியாக வீட்டிற்கு வந்த அவர் வீடு உள்புறமாக பூட்டி இருப்பதை பார்த்து மேலும் பதற்றம் அடைந்தார்.

உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க காவலர்கள் பூட்டை உடைத்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் உள்ள சிமெண்ட் தொட்டியில் மர்மமான முறையில் தலையில் அடிபட்டு வினுதா இறந்து கிடந்தார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டில் ஜன்னல் அருகே கைரேகை இருப்பதை கண்டறிந்து சோதனை செய்ததில் ஜன்னல் கழட்டி பின்பு மாட்ட பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நரேந்திர பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரே மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. இரண்டு பேருக்கு ரூ.5 லட்சம் கொடுத்து தீர்த்து கட்டிய கொடூரத்தை ஒத்துக் கொண்டார். அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close