பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்காது! செங்கோட்டையன் திடீர் பல்டி!

  சாரா   | Last Modified : 28 Dec, 2019 02:17 pm
no-school-for-pongal-holidays

பொங்கல் விடுமுறை தினமான ஜன.16ஆம் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.  தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை பெரும்பாலும் குடும்பத்தினர் ஒன்றினைந்து கொண்டாவது வழக்கம். இதனால், பள்ளி மாணவர்கள் விடுமுறையையொட்டி தாத்தா, பாட்டி என சொந்த பந்தங்களுடன் பொங்கலை கொண்டாட வெளியூர்களுக்கு செல்வதுண்டு.

இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடியின் உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு, அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கட்டாயம் மாணவர்கல் பொங்கல் விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டும் என்பதில்லை என்றும், வீட்டில் பிரதமரின் உரையைக் கேட்க இயலாத மாணவர்களுக்கு பள்ளிகளில் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் செங்கோட்டையன் திடீர் பல்டி அடித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close