இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்...டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 06:34 pm
job-vacancies-in-reserve-bank

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.மொத்தம் 926 உதவியாளர் பணியிடங்களுக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Jobs
காலியிடங்கள்: 926

விண்ணப்பிக்கும் முறை :-

  •  50 சதவிகிதத்திற்கு மேலான மதிப்பெண்ணுடன் ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  •  இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளமாக  ரூ.14,650/- கொடுக்கப்படும்.
  •  விண்ணப்பிப்பவர்களுக்கு 1-12-2019  அன்று குறைந்தபட்சமாக 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது
  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in எனும் இணையதளத்தில், பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

                                                  

சென்னையைப் பொறுத்தவரையில் 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து, பெங்களூருவில் 21 காலியிடங்களும், திருவனந்தபுரம்& கொச்சியில், 20 காலியிடங்களும் உள்ளது.அதிகபட்சமாக மும்பையில் 419 காலியிடங்கள்...

காலியிடங்கள்:
சென்னை – 67,
பெங்களூரு – 21,
திருவனந்தபுரம் மற்றும் கொச்சி – 20 
ஐதராபாத் – 25,
போபால் – 42,
புவனேஸ்வர் – 28,
சண்டிகர் – 35,
அகமதாபாத் – 19,
கவுகாத்தி – 55,
ஜெய்பூர் – 37,
ஜம்மு – 13,
கான்பூர் & லக்னோ – 63,
கொல்கத்தா – 11,
மும்பை – 419,
நாக்பூர் – 13,
புதுடெல்லி –34,
பாட்னா – 24

 விண்ணப்பிக்க கடைசி தேதி : 16 ஜனவரி 2020
முதல் நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 14, மற்றும்  பிப்ரவரி 15

மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close