எங்கேயா சீமான் சின்னத்தைக் காணோம்?! உள்ளாட்சித் தேர்தலில் பரபரப்பு! 

  Ramesh   | Last Modified : 28 Dec, 2019 06:28 pm
symbol-missing-for-seeman-s-party

தமிழகத்தில் முதல் கட்ட  உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று காலை 7 மணி முதல்மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடை பெற்று முடிந்தது. மொத்தம் உள்ள  45,336 பதவிகளுக்கு, 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.24,680 வாக்குச்சாவடிகளில்  வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக பல சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. புகார்கள் எல்லாம் உடனடியாக கவனித்து சரிசெய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

பொது மக்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தமது வாக்கை பதிவு செய்தனர். இந்தச் சூழ்நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு பரபரப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெறும் சில இடங்களில், வாக்கு சீட்டில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பொறிக்கப்படாமல் இருந்தது  கட்சி உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்னம் பொறிக்கப்படுவதற்கு பதிலாக அந்த இடத்தில கரும்பு விவசாயி என மட்டும் எழுதப்பட்டு இருந்தது.  

நாம் தமிழர் கட்சியினர் சார்பில் உடனடியாக இதை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்ற அதிகாரிகள் உடனடியாக வாக்கு சீட்டில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒட்டி கொடுத்தனர்.  கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close