டூப் இல்லாமல் 100 அடி உயரத்திலிருந்து குதித்த அஜித்! திகிலடைந்த இயக்குநர்!!

  சாரா   | Last Modified : 29 Dec, 2019 08:49 am
ajith-s-risky-shot

எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் வலிமை படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே தொடர உள்ளனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த படம் அடுத்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய  திட்டமிடப் பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஏகப்பட்ட ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் இடம்  பெற்று இருக்கிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் அஜித்  செய்த வேலையைத் தான் மொத்த யூனிட்டும் பரபரப்பாக பேசுகிறது. படத்தில் ஒரு காட்சிக்காக ஹீரோ அஜித் 100 அடி உயரத்திலிருந்து குதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயக்குநர் வினோத்  இந்தக் காட்சியை டூப் நடிகரை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால் டூப் போடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டார் தல அஜித்.
எவ்வளவு பெரிய ரிஸ்க் ஆக இருந்தாலும் நான் மட்டுமே எடுப்பேன்.

தன் படத்துக்காக இன்னொருவர் ரிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை எனவும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது என்னுடனே போகட்டும். அப்படி ரிஸ்க் எடுத்து நடிப்பவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என்று இருக்கிறது தானே என்று இயக்குனருக்கு தைரியம் சொல்லி, அஜித் தைரியமாக அந்த ஷாட்டில் நடித்து 100 அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறார். அந்தக் காட்சி படம் பிடித்து முடியும் வரையில் மொத்த யூனிட்டும் நகத்தைக் கடித்துக் கொண்டு பதைபதைப்பில் இருந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close