ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்.. நெகிழ்ச்சியான சம்பவம்

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 08:49 am
howrah-express-indian-army-doctors-help-deliver-premature-baby

ரயிலில் திடீரென பிரசவ வலி வந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இராணுவ மருத்துவர்கள், கேப்டன் லலிதா மற்றும் 172 ராணுவ மருத்துவமனையின் கேப்டன் அமன்தீப் ஆகியோர் ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரயிலில் வந்த ஒரு கர்ப்பிணி பயணிக்கு முன்கூட்டியே பிரசவ வலி வந்துள்ளது. தகவலறிந்த லலிதா மற்றும் அமன்தீப் ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். இதில் தாய் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். 

இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் செயலை பாராட்டும் வகையில் இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தியையும் புதிதாகப் பிறந்த குழந்தையின் படத்தையும் பகிர்ந்துள்ளது. குழந்தை பிறந்த ஹவுரா எக்ஸ்பிரஸ், மேற்கு வங்காளத்தின் ஹவுரா சந்திப்புக்கும் குஜராத்தின் அகமதாபாத் சந்திப்புக்கும் இடையில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close