"ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது"... அப்போ கடனே கிடையாதா என அதிரும் சோசியல் மீடியா..

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 08:07 am
no-credit-until-rajinikanth-start-political-party

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியலுக்கு வருவேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உடனடியாக ரசிகர் மன்றங்களை எல்லாம் மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி, அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.

எனினும் ரஜினிகாந்தோ அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். நெட்டிசன்கள் ரஜினியின் அரசியல் வருகை குறித்து சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை உலவ விட்டனர். 

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நக்கலடிக்கும் விதமாக பெட்டிக்கடைக்காரர் வைத்த அறிவிப்பு பலகை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிக்காமல் நாட்களை கடத்தி வருவதை அழகாக விமர்சித்துள்ளது அந்த அறிவிப்பு பலகை. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் அந்த அறிவிப்பு பலகையின் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் சிலர், இனி கடனே கிடையாது என்பதை எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close