அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..! 

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 08:37 am
infants-die-in-2-days-in-rajasthan-kota

கோடா அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் கோடா என்ற பகுதியில் உள்ள ஜ.கே.லோன் அரசு மருத்துவமனையில் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இந்தாண்டு மட்டும் 940 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் இந்த வாரத்தில் மட்டும் 12 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்திருக்கும் நிலையில் போதிய ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close