சாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..?

  முத்து   | Last Modified : 29 Dec, 2019 11:14 am
rangoli-against-caa-5-detained

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் வன்முறையிலும் முடிந்தன.

தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர்.

அவர்கள் கோலத்தில் Against CAA, Against NPR  என எழுதினர். இந்நிலையில்  முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஒரு ஆண், 4 பெண்கள் என ஐந்து பேரை தடுத்து நிறுத்தி, போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்களை எச்சரித்து காவல்துறை விடுதலை செய்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close