கையில் காசே இல்லாமல் இந்தியாவை சுற்றும் இளம்பெண்..

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 02:52 pm
girl-traveling-around-india-without-money

கேரளாவை சேர்ந்தவர் உமாராய். இவருக்கு சிறுவயதில் இருந்தே பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம். இதனால், 10 வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்து கொண்ட உமாராய், பின்னர் ஜர்னலிசம் படித்துள்ளார். ஆனால் பயணம் செய்வதற்கு பணமோ, பட்டமோ தேவையில்லை என்பதை புரிந்து கொண்ட உமாராய் கடந்த செப்.5 ஆம் தேதி திருச்சூரில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். 

கையில் இருந்து ஒரு பைசாக்கூட செலவழிக்காமலே தற்போது நாகாலாந்தை அடைந்திருக்கிறார். உமா இப்படி ஒரு பயணம் போவதை தன் பெற்றோர்களிடம் கூடச் சொல்லவில்லையாம்.. இன்ஸ்டா கிராமில் உமா போட்ட புகைப் படங்களை அவரது சகோதரி பார்த்துவிட்டு சொல்லித்தான் அவரது பெற்றோருக்கே இது தெரியுமாம். அதுவரை, உமாவின் நண்பர்கள்தான் அவரது பயணத்திற்கு உதவுவதாகத்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். 

இப்படி கையில் காசில்லாமல் வழியில் பார்க்கிற வாகனங்களை கைகாட்டி லிஃப்ட் கேட்டு பயணிப்பதை ஆங்கிலத்தில் ஹிட்ச் ஹைக்கிங் என்பார்கள். இந்தியாவில் இதுபோன்று யாரும் பயணிப்பதில்லை. இருந்தும் உமா ராய் இப்படிப்பட்ட ஒரு சக பயணியை மைசூரில் சந்தித்திருக்கிறார்.

பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா,ஒரிசா, மேற்குவங்கம், அஸ்ஸாம் கடந்து இப்போது நாகாலாந்தில் இருக்கும் உமாராய் தனது பயணத்தில் பல வகையான அனுபவங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அதில், பெரும்பாலும் இரவுகளில் தங்குவதற்கு இடம் தேடும்போதே நிகழ்வதாக கூறுகிறார். 

ஆரம்பத்தில், அவரது சொந்த மாநிலமான கேரளாவில், தொடு புழா என்கிற ஊரில் இரவு தங்க இடம் தேடி சில வீடுகளில் கதவைத் தட்டி உதவி கேட்டபோது, அதில் ஒருவர் தீவிரவாதி என நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது வாகனத்தில் அழைத்துச் சென்று இரவு தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்களாம்.

இதேபோல், மைசூரில் சந்தித்த சக ஹிட்ச் ஹைக்கிங் டிராவலருடன் ஒரிசாவில் ஓரிரவு டெண்ட் அமைத்து தங்கியுள்ளனர். அப்போது, உள்ளூரை சேர்ந்த ஒருவர் இருவரும் தன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கலாம் என்று அழைத்து இருக்கிறார். ஆனால், அவரது நோக்கம் வேறு என்பதை அறிந்த இருவரும், அன்று இரவு மூன்று மணிக்கு நடுங்கும் குளிரில் வெளியேறி நடந்திருக்கிறார்கள்.

ரயில், லாரி, கார் என்று கிடைக்கிற வாகனத்தில் பயணிக்கும், உமா, காசு செலவு செய்தால்தான் இனிமேல் பயணிக்க முடியும் என்கிற நிலை வரும்போது ஊர் திரும்பி விடுவேன் என தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close