இனி மெசேன்சருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம்.. அதிரடி உத்தரவால் பயனாளர்கள் அதிருப்தி..

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 05:18 pm
facebook-account-is-mandatory-for-messenger

பேஸ்புக்கின் மெசேன்ஞர் சேவையை பயன்படுத்த இனி பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் மெசேன்ஞர் என்ற சேவை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் போன்று மெசேஞ்சர் வாயிலாகவும் குறுந்தகவல்களை அனுப்ப முடியும். இதனை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் பேஸ் புக் செல்லாமலும்,  பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்கள் நேரடியாகவும் Messenger மற்றும் Messenger Lite ஆகிய செயலிகள் மூலம் பயனாளர்கள் பெற்று வந்தனர். 

இந்நிலையில், மெசேன்ஞர் நிறுவனம் அதில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி இனி Messenger சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் பயனாளர்கள் பேஸ்புக்கினுள் உள்நுழைவது (log in) அவசியமாகிறது. இந்த புதிய விதிமுறை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கட்டாயமாகிறது. அதேசமயம் அக்கவுண்ட் இல்லாமல் நேரடியாக உபயோகித்தவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளால் பயனாளர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close