ரஜினிகாந்த் பேரன்களுக்கு இத்தனை கோடி சொத்தா? வாய் பிளக்கும் ரசிகர்கள்!

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 04:46 pm
how-many-crores-deposits-for-rajinikanth-grandson

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து, உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினி காந்த். 167 படங்களை நடித்துள்ள ரஜினிகாந்த்  பல கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தில், ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம், இந்திய சினிமாவில் ரூ.100 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். 

ரஜினிகாந்திற்கு வேத், யாத்ரா மற்றும் லிங்கா என்று மூன்று பேரன்கள் உள்ளனர். இவர்களது பெயரில் தலா ரூ.25 கோடியை ரஜினிகாந்த் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறாராம். இந்த பணத்தை 25 வயது ஆன பிறகே எடுக்க முடியும் என்பது போலவும், அதற்குள் 25 கோடி, 90 கோடியாக உயர்ந்திருக்கும் அளவில் டெபாசிட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி 22 வயது அடையும் போது, வட்டி பணம் ரூ.50 லட்சம் இவர்களுக்கு சம்பளமாக கிடைக்கும் படி செய்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் பல தொழில்களை செய்து வரும் ரஜினிகாந்த், இந்தியா முழுவதும் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close