ஆண்டாள் கோவில் அருகே கிறிஸ்துவ மத பொம்மைகள்.. மனம் குமுறிய இந்துக்கள்...

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 07:14 pm
christian-toys-sales-near-andal-temple

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வர்த்தகக் கடைகளில், கிறிஸ்துவ மத சின்னங்கள், பொம்மைகள் விற்பனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆண்டாள் கோயிலில் இது போன்று வியாபாரத்துக்காக கிறிஸ்தவ மத சின்னங்களை விற்பனை செய்வது தங்களைப் புண்படுத்தியதாகக் கூறி, ஒரு வீடியோவும் வெளியானது. அதில், ஆண்டாளுக்கும் பாதுகாப்பில்லை, ஆண்டாள் கோயிலுக்கும் பாதுகாப்பில்லை என்றும் வேறு எந்த மதத்தின் வழிபாட்டுத் தலத்திலும், இந்துக்களின் புனிதச் சின்னங்களை விற்பனை செய்வார்களா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வந்தது. 

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாஜக., நிர்வாகியான ராஜா விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் வெளியூரை சேர்ந்த தெருவோர வியாபாரி என்பதும், அவருக்கு இது போன்றவை விஷயங்கள் தெரியாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு புரிய வைத்து அங்கிருந்த விற்பனை பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்குமாறு கூறினார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close