திமுக பிரமுகர் வீட்டில் திடீர் ரெய்டு..கட்டு கட்டாக சிக்கிய ரூ.1000 நோட்டுகள்..

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 07:27 pm
sudden-raid-on-dmk-magnate-house

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ. இவரது மகன் ஆனந்தன். இவரும் திமுக கட்சியில் உள்ளார். இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள ஆனந்தன் வீட்டில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 

இரவு நேரத்தில் நடைபெற்ற அதிரடி சோதனயில் ரூ.2,68,000 மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும்  காகித ரூபாய் நோட்டுகள் போன்ற காகிதப் பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தப் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கொண்டு மோசடி செய்ய திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த பங்களாவில்,  திரைப்படம் மற்றும் சில நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மத்தியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close