தெர்மாகோலை மிஞ்சிய அரசு ஊழியர்கள்!

  அனிதா   | Last Modified : 30 Dec, 2019 01:29 am
government-employees-pouring-water-into-the-rain

புதுச்சேரி கடற்கரை சாலையில் கொட்டும் மழையில் நனைந்தபடி அரசு ஊழியர்கள் அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மாகோல்களை கொண்டு வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கி நெட்டிசன்களின் மீம்ஸ்களால், சமூக வலைதளங்களில் பெரிதும் வளர்ந்தார். இதை தொடர்ந்து இதுபோன்ற எந்த சம்பவங்கள் நடைபெற்றாலும், செல்லூர் ராஜூவை மிஞ்சிய விஞ்ஞானி என்றே பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியின் சுற்றுலாத் தளமான கடற்கரை சாலையில் உள்ள அழகு செடிகள் மற்றும் மரங்களுக்கு அரசு ஊழியர்கள் தண்ணீர் ஊற்றும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசு பெண் ஊழியர் ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடியே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி செல்கிறார். 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், செல்லூர் ராஜுவை மிஞ்சும் அளவிற்கு விஞ்ஞானி என்றும், உங்க கடைமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்ற வார்த்தைகளுடன் கூடிய மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. 

Newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close