தானாக சென்று சிக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்.. கண்டபடி கலாய்க்கும் சூர்யா, அஜித், ரஜினி ரசிகர்கள்...

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 09:27 pm
commends-on-a-r-murugadoss-twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபகாலமாக சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில், பூவரசன் பீப்பி எனும் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த, இயக்குனர் ஹலிதா ஷமீமின் இயக்கத்தில் "சில்லுக்கருப்பட்டி" என்ற படத்தை தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனி, நடிகை சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு விதமான காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

அதோடு, சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசை பட்டியலில் 2ம் இடத்தை பெற்றும் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் "சில்லுக்கருப்பட்டி படம் அற்புதமாக இருப்பதாக கேள்விப்படுகிறேன் வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அஜித், சூர்யா, ரஜினி ரசிகர்கள், அப்போ நீங்க படத்த பாக்கல, ஆமாம், கதையை யாரிடம் இருந்தும் திருடாமல் எடுத்து இருக்காங்க என்று கண்டபடி கலாய்த்து வருகின்றனர். 

 

— A.R.Murugadoss (@ARMurugadoss) December 28, 2019

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close