பெண் போன்று நடித்து மாணவி குளித்த வீடியோவை காட்டி பாலியல் தொல்லை.. வெறிபிடித்த இளைஞர்

  முத்து   | Last Modified : 30 Dec, 2019 08:17 am
youth-arrested-for-molesting-student

சமூக வலைதளத்தில் 16 வயது மாணவியிடம் ஆபாச வீடியோவை காட்டி பெண் குரலில் மிரட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 16 வயது மாணவி தாயுடன் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 26ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், மகேஷ் என்ற இளைஞர் எனது மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் முதலில் ஆணாகவும், பின்னர் வேறு கணக்கில் பெண்ணாகவும் பழகி ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி, பாலியல் தொல்லை தந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மகேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் மணலியை சேர்ந்தவர் என்பதும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் உறுதி ஆனது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

இவர் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் நட்பாக பழகினார். ஒருகட்டத்தில் மாணவியை தவறான உறவுக்கு அழைக்கும் நோக்கத்தில் அந்த நபர் சாட் செய்தார். இதற்கு அந்த மாணவி மறுக்கவே கவுசல்யா என்ற பெயரில் மகேஷ் புதிதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி மீண்டும் நட்பாக பழகினார். பெண் தான் என நினைத்து மாணவி கவுசல்யா அந்த கணக்கில் வழக்கம் போல நட்பாக பேசி சாட் செய்தார். ஒரு கட்டத்தில் மாணவி குளித்து  கொண்டிருக்கும் வீடியோவை நைசாக பேசி பதிவு செய்துள்ளார். மேலும் பெண் குரலிலும் பேசி உள்ளார். இதையடுத்து ஆபாச வீடியோக்களை வைத்துக்கொண்டு மகேஷ் அந்த மாணவியை மிரட்டி போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி உறவுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close