தியேட்டரில் படம் பார்த்துகொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வடபழனி வணிக வளாகத்தில் இருவர் கைது

  முத்து   | Last Modified : 30 Dec, 2019 08:30 am
sexual-harassment-for-woman-while-watching-movies

வடபழனி வணிக வளாகத்தில் படம் பார்த்தபோது, பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த பைனான்ஸ் அதிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் பெத்தானியா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சமி (40). இவர் தனது குடும்பத்துடன் வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இரவு காட்சி திரைப்படம் பார்க்க சென்றார். திரைப்படம் தொடங்கியதும் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 2 இளைஞர்கள் ஜெயலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட ஜெயலட்சுமியை அவர்கள் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஜெயலட்சுமி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமிக்கு தொல்லை தந்த 2 இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சாலிகிராமம் மஜித் நகரை சேர்ந்த ரமிஸ் மற்றும் ரமேஷ் என தெரிய வந்தது. இருவரும் குடிபோதையில் இருந்ததால் முன் இருக்கையில் அமர்ந்து படம் பார்த்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வணிக வளாக திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மது அருந்தினால் வணிக வளாகத்தில் உள்ள தியேட்டரில் அனுமதி கிடையாது என்ற நிலையில், இருவரும் மதுபோதையில் உள்ளே சென்றது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close