ஊசி போட்ட மருத்துவர் - உடனே உயிரிழந்த பெண்.. ஆத்திரத்தில் உறவினர்கள்..

  முத்து   | Last Modified : 30 Dec, 2019 10:16 am
woman-dies-after-taking-injection-private-medical-shop

பெரம்பலூர் அருகே குன்னம் அடுத்த கீழப்புலியூர் கிராமத்தில் கதிரவன் என்பவருக்கு சொந்தமான தனியார் மருந்தகம் உள்ளது. பக்கத்து கிராமமான சிறுகுடல் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மருந்தகத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு கதிரவன் ஊசி போட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்து தமிழ்ச்செல்வி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் கதிரவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தாயையும் தந்தையையும் இழந்த அவரது நான்கு பிள்ளைகளும் ஆதரவற்று நிற்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close