தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!நீண்ட வரிசையில் பொதுமக்கள்! 

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 12:26 pm
2nd-list-of-voting-in-tamil-nadu-today

ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தல் 27ம் தேதி முடிவடைந்துள்ள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46, 639 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கான  வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.  

58 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2,544 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4,924 ஊராட்சி தலைவர் பதவி, 38, 916 வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close