மெட்ரோ ரயிலில் வேலை! ரூ. 60,000 சம்பளம்!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 01:05 pm
work-on-metro-rail-rs-60-000-salary

மெட்ரோ கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த 14 காலியிடங்களுக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், சம்பளம் மாதம் ரூ.60,000 - 1,80,000 எனவும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு  35க்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, பொறியியல் துறையில் ஆர்க்கிடெக், சிவில், ப்ளானிங், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 2, 4, 5, 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் தகுதியானவர்கள். இந்த பணியிடங்களுக்கான சம்பள விகிதம் ரூ.50,000 - 1,60,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.mmrcl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mmrcl.com/sites/default/files/Advt.%20copy-%20Website.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2020

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close