சென்னையில் வெறும் 50 ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை!!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 03:48 pm
full-body-test-for-50-rupees-in-tamil-nadu-health-department

ஒவ்வொரு வருடமும் சென்னைத் தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி நடைப்பெறும். இந்த வருடத்தில், 46வது சுற்றுலா கண்காட்சி சமீபத்தில் தொடங்கியது. தமிழகத்தின் ஒவ்வொரு துறை சார்பிலும் தனித்தனியே அமைக்கப்பட்டிருக்கும் அரங்குகள் மக்களை ஈர்த்து வரும் நிலையில், காவல்துறை, தீயணைப்புத் துறை, ரயில்வே துறை, சுகாதாரத்துறை போன்ற அரசு சார்ந்த துறைகளின் அரங்குகள் பொது மக்களையும், குழந்தைகளையும் அதிகளவில் ஈர்த்து வருகின்றன. 

குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில், தமிழகத்தில் அரசின் சார்பாக சுகாதாரத்துறையில் செய்யப்படும் பரிசோதனைகள், திட்டங்கள் போன்றவற்றை எளிதில் மக்களிடையே கொண்டுச் செல்லும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும், அம்மா முழு உடல் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். 

இந்த பொருட்காட்சியில் பொதுமக்களுக்கு உடனடியாக ரூ. 50 கட்டணத்தில் 12 வகையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து, பரிசோதனை முடிவுகளையும், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் உடனுக்குடன் சொல்கிறார்கள். நோய்களுக்கான தீர்வு, ஆலோசனை போன்றவைகளையும் உடனடியாகச் சொல்கிறார்கள். 

 

இந்த மருத்துவ சேவை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close