11ம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை! கல்லூரி மாணவன் செய்த அராஜகம்!!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 03:16 pm
lover-gave-abortion-tablet-made-16years-college-girl-serious

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த காட்டூர் பகுதியில் வசித்து வரும் வசந்த் என்கிற கல்லூரி மாணவன், அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலித்து வந்தார்.  இரு வீட்டாருக்கும் தெரியாமல் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றி காதலித்து வந்தனர். இந்நிலையில், காதலி கர்ப்பமானதை அடுத்து, செய்வது அறியாது திகைத்த கல்லூரி மாணவன், கருவை கலைப்பதற்காக மருந்துக்கடையில் கருகலைப்பு மாத்திரை வாங்கி மாணவிக்கு கொடுத்துள்ளார்.

                                                         
வச்ந்த் வாங்கிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட மாணவிக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மகளை, பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் சிகிச்சையளித்து மாணவியைக் காப்பாற்றினார்கள். விசாரணையில், மாணவி கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாத்தா, காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, கல்லூரி மாணவர் வசந்த்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close