மனைவியை கொலைச் செய்தவரை ஊர் மக்களே அடித்துக் கொன்ற கொடூரம்!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 12:34 pm
killed-on-bail-in-case

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்வெப்பாலம்பட்டியில் கோவிந்தராஜ் - கஸ்தூரி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கஸ்தூரிக்கும், கோவிந்தராஜின் சகோதரன் சின்னசாமிக்கும் (29) இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கடந்த மே மாதம் மனைவி கஸ்தூரியை வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே கோவிந்தராஜிக்கும், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த பெருமாள் (55) என்ற விவசாயிக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் கொலை வழக்கில் சிறை சென்று வந்த கோவிந்தராஜை ஊர் பக்கமாக வரக்கூடாது என்று பெரியவர்கள் சிலர் கூறியதாக தெரிகிறது. 

இந்நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் பெருமாளிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கைகலப்பு ஏற்படவே அவர் வைத்திருந்த அரிவாள் எடுத்து பெருமாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற செல்வத்தையும் அரிவாளால் வெட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கோவிந்தராஜை கற்களால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனிடையே படுகாயம் அடைந்த பெருமாள், செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறை சென்று வந்த பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் அனைவரிடமும் கோவிந்தராஜ் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் கோவிந்தராஜ் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close