தமிழகத்தில் பயங்கரவாதிகள்! நியூ இயர் பதைபதைப்பில் உளவுத்துறை!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 12:24 pm
terrorist-infiltration-in-tamil-nadu

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் தமிழகத்தில், கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் சுற்றித் திரிவதாகவும், எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறும் மத்திய உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தி உள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நாச வேலையில் ஈடுபட திட்டமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. அனைத்து காவலர்களும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் இருப்பர். இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கையால் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close