புத்தாண்டு 2020: அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 12:44 am
the-metro-train-will-run-till-midnight

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று இரவு 11 முதல் 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
2020 புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் பல இடங்களில் நடைபெறும். நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால், பயணிகளின் வசதிக்காக இரவு 11 முதல் 1 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் புத்தாண்டையொட்டி ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருவிழா காலங்களிலும் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் இரவில் நீட்டிக்கப்படுவது வழக்கம். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கூடுதல் நேரம் மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படும் என்பதால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close