ஒரே வீட்டில் எரிந்த நிலையில் 5 சிறுவர்கள் உட்பட 6 சடலங்கள் மீட்பு..! பதறவைக்கும் சம்பவம்!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 09:37 am
six-people-electrocuted-to-death

குறைந்த மின் அழுத்தம் காரணமாக ப்ரிட்ஜ்  வெடித்து 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் கஷியாபாத் லோனி நகரில் உள்ள வீட்டில் 40 வயது நிறைந்த பர்வீன் மற்றும் பாத்திமா(12), ஷாயிமா(10),  ரதியா(8),  அப்துல் அசீம்(8) மற்றும் அப்துல் அகத்(5) ஆகியோர் இருந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கவனிக்காமல் அனைவரும் வீட்டினுள்ளே இருந்துள்ளனர்.

அப்போது வீடு முழுவதும் தீ பரவிய நிலையில், அவர்களால் வீட்டிலிருந்து தப்பிக்க முடியவில்லை. மேலும் ப்ரிட்ஜ் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அனைவரும் தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். பின்னர் 6 பேரின் உடலையும் மீட்டனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close