மோடி பெரிய ப்ராடு பையன்! வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ உள்ளே!

  சாரா   | Last Modified : 31 Dec, 2019 03:33 pm
controversy-against-pm-and-home-minister-case-against

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.  இதில், மேடை பேச்சாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிள்ளார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசியதாக பா.ஜ.க. தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார், கலவரம் ஏற்படும் வகையில் பேசுதல், மக்களை கிளர்ந்தெழ செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close