உஷார்!! ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமி! புது வருஷத்தை ஜாக்கிரதையா கொண்டாடுங்க!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 11:17 am
girl-head-trapped-giant-gymnasium-besant-nagar-beach

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் விளையாட்டுப் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். அதில் சல்மா என்ற சிறுமி ராட்சத ராட்டினத்தில் எறியுள்ளார். ராட்டினம் சுற்றத் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக சிறுமியின் தலை பக்கவாட்டு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் கூச்சலிட்டு சிறுமியை காப்பாற்ற கோரினர். மேலும் ராட்டினத்தை நிறுத்தவும் சத்தம் போட்டபோது, ராட்டினம் ஆபரேட்டர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனால் அனைவரும்  அதிர்ச்சியடைந்த சில சிமிடங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ராட்டினத்தை நிறுத்தி நீண்ட நேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாஸ்திரி நகர் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருவதோடு, ஆபத்து நேரத்தில் காப்பாற்றாமல் ஓடிய ராட்டினம் ஆபரேட்டரை தேடி வருகின்றனர். விளையாட்டு பூங்காவில் முறையான பாதுகாப்பு நடவடிக்கை ஏதுமில்லை என்று பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close