பள்ளி சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 12:00 pm
woman-absconded-with-17-year-old-boy

மதுரையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது சிறுவனோடு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா வீட்டில் தங்கி அந்த 17 வயது சிறுவன் பள்ளியில் படித்து வருகிறான். சிறுவனும், அவரது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணுக்கு நட்பு இருந்துள்ளது. இருவரும் சகோதர, சகோதரி போன்று பழகியதால் இரு வீட்டாருக்கும் அவர்கள் மேல் எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால்  இருவருக்கும் இடையிலான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது. ஆனால் வயது வித்தியாசம் காரணமாக தங்கள் வீட்டில் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்த அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.  இருவரும் காணாமல் போனதை அடுத்து சம்மந்தமாக இருவரின் வீட்டாரும் போலீஸில் புகாரளித்துள்ளனர். இது சமம்ந்தமாக போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close