இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்கிறது! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!

  சாரா   | Last Modified : 31 Dec, 2019 08:13 pm
train-fare

ரயில்வே அமைச்சகம் ஜனவரி 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய கட்டணம் இன்று நள்ளிரவு முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று நள்ளிரவு முதல் ஏசி ரயில் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு கூடுதலாக 4 பைசா கட்டணமும், சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசாவும், எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத ரயில்களுக்கு 2 பைசா கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 2020 புத்தாண்டு முதல் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது புதிய திருத்தப்பட்ட கட்டணத்தில் புறநகர் ரயில்கள் விடப்படுகின்றன. மேலும், முன்பதிவு கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம் போன்றவற்றுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. 

 

நீதிமன்றத்தின் உத்தரவின் படியும் அமைச்சரவை முடிவின்படியும் குரூப் A அந்தஸ்தை ஆர்.பி.எஃப்.-க்கு வழங்கியதன் விளைவாக, ஆர்.பி.எஃப் இனி இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது”என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close