வாகனங்களை மடக்கி வசூல்.. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவி அடாவடி

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 07:45 am
woman-arrested-for-acting-like-police


மும்பையில் துணை காவல் ஆணையராக பணி புரிந்து தாமோதர் என்பவர் ஓய்வு பெற்றார். ஆனால் தற்போது இவரது குடும்பத்திற்கு பண கஷ்டம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் ஓய்வு பெற்றதால் களத்தில் இறங்கினார் மனைவி. 52 வயதான அவரது மனைவி பார்தி தாமோதர் போலீஸ் அதிகாரி போன்று வேடமிட்டு இளைஞர் ஒருவருடன் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்.

அதன்படி, குட்கா,பான்மசாலா ஏற்றி சென்ற டெம்போவை மடக்கி தாங்கள் போலீஸ் என்றும், குட்காவை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்றும் கேட்டார். அப்போது டெம்போ ஓட்டுநருக்கு இவர்கள்மீது சந்தேகம் வந்து போலீசுக்கு தகவல் தந்தார்.

அங்கு வந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அப்போது அந்த பெண் குற்றவாளி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மனைவி என்பது தெரிந்து அதிர்ச்சியுற்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close