12 வயது சிறுமி 3 மாத கர்ப்பம்.. தலைமறைவான கயவனுக்கு வலைவீச்சு 

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 08:47 am
a-12-year-old-girl-is-pregnant-abdominal-pain-treatment

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களாக வயிற்றுவலி இருந்தது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அந்த சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமியை யாரோ ஏமாற்றி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததும் மேற்கொண்டு விசாரணை நடத்தி, அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close