பல இடங்களில் CAA-க்கு எதிராக போராட்டம் நடத்தி புத்தாண்டை வரவேற்ற தமிழர்கள்..

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 09:35 am
new-year-celebration-anti-caa-protesters

2020 புத்தாண்டை வரவேற்று ஒரு புறம் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், மற்றொரு புறம் குடியுரிமை திருத்தச்  சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்,ஏ.,வுமான தமிமுன் அன்சாரி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கைகளில் தேசிய கொடி, மெழுகுவர்த்தி மற்றும் பதாகைகள் ஏந்தி, புத்தாண்டு பிறந்த 12 மணிக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் கடும் குளிருக்கு மத்தியில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான முழக்கங்களுடன் புத்தாண்டை வரவேற்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close