சினிமா ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்.. கடைசி நிமிடத்தில் தப்பிய திக் திக்..  

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 08:26 am
people-did-planto-human-sacrifice-a-nepal-girl

 நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் இருந்துள்ளார். பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகம் ஆகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுதருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய அப்பெண் பெரிய நடிகையாகும் ஆசையில் பீகாரைச் சேர்ந்த பெண் கூறுவதையெல்லாம் செயதுள்ளார். இந்நிலையில் நேபாளத்தில் இருந்து ஒருநாள் பீகாருக்கு வந்துகொண்டிருக்கும்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. இதில் பீகாரை சேர்ந்த பெண்ணும் இருந்துள்ளார். இதனையறிந்த நேபாள போலீசார் அவர் சென்ற வாகனத்தை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது பீகாரை சேர்ந்த பெண்மணி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.  பின்னர்  சூரிய கிரகணத்தின் போது பலிகொடுக்க இந்தப் பெண்ணை கடத்தி வந்ததாக அப்போது அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தப்போது அங்கு நரபலி பூஜைக்கு தயாராக இருந்ததும் தெரியவந்தது. ஒருவேளை அப்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டிருந்தால் இந்நேரம் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம். இதனை எண்ணி நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார். இதனிடையே பீகாரைச் சேர்ந்த கும்பல் வேற யாரையும் நரபலி என்ற பெயரில் கொலை செய்துள்ளனரா? எதற்காக நரபலி என்ற கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close