மெரினாவில் ஹெச்.ராஜா தலைமையில் போராட்டம்! விழி பிதுங்கும் போலீசார்!

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 02:56 pm
will-protest-in-merina-says-bjp

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் போராட்டம் நடைபெறும் என பாரஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசவிரோதமாக செயல்படும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து சென்று விட்டதாகக் கூறினார்.நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் இன்று தடையை மீறி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.

நாட்டின் பிரதமரையும், இந்து கடவுள்களையும் தரக்குறைவாகப் பேசிய வைரமுத்து உள்ளிட்டவர்களை இதுவரை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பது வருத்தத்துக்குரியது என்று ஹெச்.ராஜா பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நெல்லை கண்ணனைக் கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நான், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பதிவிட்டுள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close